முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீண்டும் மாணவர்களுக்காக களமிறங்கியுள்ளார். இதனால் கல்லூரி மாணவர்கள் அனைவரும் குஷியில் உள்ளனர். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “நோய் தொற்று காரணமாக சுமார் 20 மாதங்களுக்கு மேலாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தது. இதில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கடைசி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. […]
