சென்னை மெரினா கடற்கரையில் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமிழக அரசின் 151 மகளிர் உதவி மையத்தின் சார்பாக மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டது. இந்த மணல் சிற்பத்தை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு “பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்திடுவோம்! பெண்களுக்கான இடர் இல்லா சமுதாயத்தை உருவாக்கிடுவோம்! பெண்களின் பாதுகாப்பிற்காக அனைவரும் உறுதி ஏற்போம்! என்னும் பெண்களின் பாதுகாப்பு உறுதிமொழி விழிப்புணர்வு” பதாகையில் கையெழுத்திட்டார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு, உயர்கல்வித்துறை […]
