அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணியினர் கட்சிக்குள் மாறி மாறி அணிமாற சிலர் வேறு கட்சிக்கும் தாவுகின்றனர். அந்த வகையில் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த கோவை செல்வராஜ் திடீரென திமுகவில் இணைந்தார். அதன்பிறகு கிருஷ்ணகிரியை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளரான ஜே.கே. வெங்கடாசலம் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இணைந்துள்ளார். இந்நிலையில் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ வி.பி. கந்தசாமி தற்போது முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்ததோடு […]
