இந்திய அணியில் தேர்வாகியுள்ள சேலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு தமிழக முதல்வர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியில் விளையாடி கொண்டிருந்த வருண் சக்கரவர்த்தி என்பவர் காயம் ஏற்பட்டதால் டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதனால் அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் சேலம் சின்னம்பட்டி பகுதியில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். மேலும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வந்துள்ளார். அதுமட்டுமன்றி துல்லியமான யார்க்கர், தரமான பந்துவீச்சு மூலமாக […]
