தேர்தல் பிரச்சாரத்தில் பொதுக்கூட்ட மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த பொழுது மயங்கி விழுந்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. குஜராத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் வதோதராவின் நிஜம்புரா பகுதியில் நேற்று ஆளும் கட்சி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் விஜய் ரூபானி பங்கேற்றார். அப்போது அவர் மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது யாரும் எதிர்பார்க்காத நிலையில் அங்கேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து விஜய் […]
