முதலமைச்சர் பழனிசாமி, விநாயகர் சதுர்த்தி பூஜையை தமது இல்லத்தில் செய்து, வழிபாடு நடத்தினார். சேலம் சூரமங்கலம் பகுதியில் அமைந்துள்ள முதலமைச்சர் இல்லத்தில் இன்று காலை விநாயகர் சதுர்த்தி பூஜை நடைபெற்றது. அப்பூஜையில் களி மண்ணால் செய்த விநாயகர் சிலையை வைத்து, பூஜைகள் செய்து, தீபாராதனை காட்டி, தோப்புக்கரணம் போட்டு, குடும்பத்தினருடன் சேர்ந்து தனி மனித இடைவெளியை பின்பற்றி முதலமைச்சர் வழிபாடு செய்தார். மேலும் பூஜையின் போது முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் முக கவசம் அணிந்திருந்தவாறு பூஜை […]
