சேலம் மாவட்டத்தில் புறநகர் கட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்திலுள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து ஓமலூரிலுள்ள அ.தி.மு.க புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்திற்க்கு சென்றள்ளார். அப்போது அங்கிருந்த நிர்வாகிகள் அவரை வாழ்த்தி கோஷமிட்டு வரவேற்றனர். […]
