தமிழகத்தில் பண்டிகை நாட்களில் பொருட்களை வாங்கிச் செல்லும் போது பொதுமக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். கொரோனா மூன்றாவது அலை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்பதால் இன்னும் ஓராண்டிற்கு முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி பணிபுரியம் தூய்மை பணியாளர் பெண்களுக்கு புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்தார். […]
