பள்ளியைவிட்டு இடைநின்ற 10 மாணவிகளுக்கு திருமணம் நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 66 மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இடையில் நின்றுள்ளனர். இந்த பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி ஆய்வு செய்தார். அப்போது இடைநின்ற மாணவர்களின் விவரம் குறித்து கேட்டறிந்தார். அதன்பிறகு மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் விதமாக மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் […]
