கொரோனவால் பாதிக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை கணக்கெடுத்து பட்டியலை அனுப்புமாறு முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில் 10ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்களின் பட்டியலை கணக்கெடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், ஜூன் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை தமிழகத்தில் 10ம் வகுப்பு […]
