ஆந்திராவில் கோழிமுட்டையை குறைந்த விலையில் விற்பனை செய்த வியாபாரி மீது பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். நெல்லூர் மாவட்டம், வரிகுண்டபாடு மண்டலத்தில் உள்ள கிராமப் பகுதியில் நேற்று மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு மினி வேன் ஒன்று சென்றது. அந்த மூட்டைகளை ஏற்றிச் சென்ற வியாபாரி ஊருக்குச் சென்று 30 முட்டைகள் 130 ரூபாய்க்கு என்று கூறி விற்பனை செய்துள்ளார். விலை குறைவாக கிடைக்கிறது என்று எண்ணி அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் டிரே கணக்கில் முட்டைகளை வாங்கி சென்றனர். […]
