முட்செடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூத்தக்குடி புதுக்காலனி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இதே பகுதியை சேர்ந்த ராமதாஸ், இவரது மனைவி தனலட்சுமி, மகன்கள் ராஜ்குமார், விஜயகுமார் போன்றோர் புதுகாலனிக்கு செல்லும் சாலையின் குறுக்கே முட்செடிகளை வெட்டி போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் ராமதாசிடம் கேட்டபோது எனது உறவினருக்கு சொந்தமான இடத்தில் சாலை அமைந்து இருப்பதாகவும், உறவினர் இறந்து […]
