கார்ப்பரேட் நிறுவனங்களை கண்டித்து சலூன் கடைகளை அடைத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களை கண்டிக்கும் வகையில் மருத்துவர் சமூகம் சங்கம், முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பாக சலூன் கடையினை மூடி போராட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியது. அதன்படி ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கபட்டு முடிதிருத்தும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி காளைமாட்டு சிலை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]
