கோவக்சின் தடுப்பூசிகளை அவசர காலப் பயன்பாட்டு ஒப்புதல் குறித்து முடிவு எடுக்கப்படும் என உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி கூறியுள்ளார். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக தடுப்பூசிகளை தயாரித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் தடுப்பூசிகளை தயாரிப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் பாரத் பயோடெக் நிறுவனமானது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்துடன் இணைந்து கோவக்சின் தடுப்பூசியை தயாரித்துள்ளது. இதற்கு இந்தியாவில் மட்டும் அவசரகால ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. […]
