கோவை குறிச்சி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள், காது கேட்கும் கருவி உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இந்த விழாவில் சுமார் 100 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் கட்சி தொண்டர்கள் மற்றும் பயனாளிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதன் பின் சிறப்புரை ஆற்றி பேசிய பா.ஜ.க தலைவர்அண்ணாமலை, “ஆண்டவன் எங்கள் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வைக்கிறார். தேசத்தை […]
