விநாயகர் சிலை செய்பவர்களுக்கு கூடுதலாக ரூ 5000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதம் தொடங்குவதற்கு முன்பாக விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் தமிழக முதல்வரிடம் கோரிக்கையை முன்வைத்தார்.. இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் என்பது பொது இடங்களில் சிலை வைத்து விழாவை கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதே தவிர, […]
