கோவை அரசு விழாவில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், சென்னை மாநகரப் பகுதி போன்று கோவை மாநகர பகுதி வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. கோவை மாநகரத்தின் வளர்ச்சியை முறைப்படுத்துவதற்க்காக கோவை நகர்ப்புற வளர்ச்சி குழுமம் ஏற்படுத்தப்படும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அதனடிப்படையில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு இருக்கு. ஏதோ அறிவிச்சோம், போனோம் என்று இல்லாமல், திட்டங்கள் குறித்து இதையெல்லாம் ஆய்வு நடத்தி, இதையெல்லாம் விரைவுபடுத்துவதற்காக தான் செந்தில்பாலாஜி அவர்களிடம் ஒப்படைத்து, பணியை மேற்கொண்டு […]
