ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் எந்தவித காரணங்களையும் குறிப்பிடாமல் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி பங்கேற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறுவது அதிர்ச்சியளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் பங்கு பெறவிருந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது. வ.உ.சி, வேலுநாச்சியார் ஆகியோர்கள் தேசிய அளவில் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள் இல்லை.. இவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது […]
