முதல்வர் உட்பட அதிமுக அரசின் மீதான ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநரிடம் திமுக தலைவர் மனு அளித்துள்ளார். இன்று காலை ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளரை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில், “கடந்த 2011ல் இருந்து 2016 வரை அதிமுக ஆட்சியில் நடைபெற்றிருக்கும் ஊழல் குறித்து உங்கள் அனைவருக்கும் தெரியும். தொடர்ந்து ஜெயலலிதா அம்மாவின் மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இருக்கும் ஆட்சியில் நான்கு வருடத்தில் எல்லாத்துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது. […]
