முகக் கவசம் அணியாதவர்களுக்கு வினோதமாக தண்டனை கொடுத்த நிலையில் விமர்சனங்களால் அந்த தண்டனை முறை நிறுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா பரவி வருவதால் பொது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. அவ்வகையில் இந்தோனேஷியாவிலும் இதே விதிமுறைகள் விதிக்கப்பட மீறுபவர்களுக்கு வித்தியாசமான முறையில் தண்டனை கொடுக்கப்படுகின்றது. இந்தோனேசியாவின் தலைநகரான ஜகர்த்தாவில் முக கவசம் அணியாதவர்களை பிடித்து சவப்பெட்டியில் படுக்க வைக்கின்றனர். அவர்கள் செய்யும் […]
