கொரோனாவை தடுக்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். திருச்சியில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஊரடங்கை தமிழக அரசு முறையாக அமல்படுத்தியதால் தொற்று பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் கொரோனவால் ஏற்படும் உயிரிழப்புகள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம், ஐசிஎம்ஆர் ஆலோசனைகளை தமிழக அரசு செயல்படுத்துகிறது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது என தெரிவித்தார். […]
