வன்முறையை தூண்டும் விதமான பதிவுகளுக்கு எதிராக வரையறுக்கப்பட்ட கொள்கைகளை மியான்மர் ராணுவம் மீறியதால் ஃபேஸ்புக் நிறுவனம் அதிரடியான செயல் ஒன்றை செய்துள்ளது. மியான்மரில் ஆங் சான் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் அந்நாட்டு ஆட்சியை கைப்பற்றியது. இதற்கு எதிராக மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஃபேஸ்புக்கில் இன்று காலை முதல் மியான்மர் ராணுவத்தின் Main Page காணாமல் போயுள்ளது. […]
