கர்நாடகாவில் இயக்குனர் மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன்” வசூல் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக உருவான திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”. பல ஆண்டுகாலமாக “பொன்னியின் செல்வன்” கதையை படமாக்க போராடிய இயக்குனர் மணிரத்னத்திற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய் மற்றும் திரிஷா என பலர் நடித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் இந்தத் திரைப்படத்தை மிகப்பிரமாண்டமாக லைக்கா நிறுவனமும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளது. […]
