பெங்களூரு ஜே.பி. நகரில் சுவாதி என்ற நடிகை வசித்து வருகிறார். இவர் கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன் சுவாதிக்கு பல் வலி ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக ஹெண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சுவாதிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மருந்துக்குப் பதிலாக ஒரு ஊசியை கொடுத்து அதை செலுத்தி கொள்ளும்படி கூறியதாக தெரிகிறது. அதன்படி அந்த ஊசியை செலுத்தி உள்ளார். பிறகு சுவாதி முகம் […]
