கோயம்புத்தூர் பீளமேடு பகுதியில் இரவு நேரங்களில் முகமூடி கொள்ளையர்கள் சுற்றித்திரியும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் பீளமேடு பாலகுரு கார்டன் குடியிருப்பு பகுதியில் நேற்று அதிகாலை அடையாளம் அறியாத சில நபர்கள் முகமூடி அணிந்துகொண்டு அப் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளனர். அத்தகைய காட்சியானது அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கின்றது. அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பீளமேடு காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். விசாரணையில், அப்பகுதியில் இருக்கின்ற […]
