கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிவது அவசியம் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் சில மாநிலங்களில் முகக்கவசம் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் நேற்று 30 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: ” கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் முககவசம் அணிவது அவசியம். […]
