பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 313 பேருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரவல் தொற்றை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் காவல்துறையினர் விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி விதிமுறைகளை மீறிய 22 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதேபோன்று பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 313 பேருக்கு மொத்தம் ரூ.63 ஆயிரத்து 600 அபராதம் […]
