தேனியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமிற்கு ஆட்சியர் முரளிதரன் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் வீரபாண்டி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தடுப்பூசி முகாமிற்கு சென்று திடீர் ஆய்வு நடத்தியுள்ளார். இதனையடுத்து அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென அறிவுரை வழங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அல்லி நகரத்திற்கு சென்ற […]
