நாகையில் முககவசம் அணியாத 30 பேருக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது . ஆனால் பொதுமக்கள் சிலர் பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் அலட்சியமாக உள்ளனர். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் […]
