கொரோனோவால் ஏற்படும் மனஅழுத்ததிலிருந்து மீள்வது எப்படி என்று மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். கொரோனா வேகமாக பரவும் இக்காலகட்டத்தில் நமது மனநலம் பேணவேண்டியது மிகவும் முக்கியமாகும். ஏன் என்றால் இந்த வைரஸிலிருந்து விடுபடவேண்டுமென்றால் தனிமைப்படுத்துதல் மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. அப்படி தனிமைப்படுத்தப்பட்டவர்கள் யாரிடமும் தொடர்பு இல்லாமல் இருப்பார்கள். அதனால் அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகுகிறார்கள். இனி இருக்கும் காலத்தை எதிர்கொள்ள நினைக்கும்பொழுது மன அழுத்தம் அதிகம் ஏற்படுகிறது. வீட்டில் அவர்கள் பயன்படுத்தும் அத்யாவசிய பொருட்கள் முடிந்து விடும் நிலையில் […]
