விருதுநகர் மாவட்டத்தில் மீன் மற்றும் இறைச்சி விலை உயர்வை தொடர்ந்து பொதுமக்கள் கருவாடு வாங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்த நிலையில் கருவாடு விளையும் சற்று உயர்ந்துள்ளது. கொரோனா 2ஆம் அலை பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடைபிடித்து வரும் நிலையில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மளிகை கடைகள், இறைச்சி மற்றும் காய்கறி கடைகளை திறக்க அரசு அனுமதித்துள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பொதுமக்கள் அனைவரும் […]
