பொதுமக்கள் மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டு பல்வேறு வகையான மீன்களை பிடித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேப்பூதகுடி கிராமத்தில் பெரியகுளம் என்ற குளம் அமைந்துள்ளது. இந்த குளம் சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நிரம்பி வழிகிறது. இதனால் கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு திருவிழாவை தொடங்கி வைத்தனர். இந்த திருவிழா 15 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பதால் மேப்பூதகுடி மற்றும் […]
