தடைகாலம் முடிந்து கடலுக்கு போகும் மீனவர்களுக்கு நாகை கலெக்டர் அருண் தம்புராஜ் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் “தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983ன் கீழ் தமிழகத்தில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில்கொண்டும் மற்றும் மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டும் வருடந்தோறும் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி முடிய மொத்தம் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நடைமுறைபடுத்தப்படும். இவற்றில் பைபர் படகை தவிர்த்து, விசைப்படகுகள் […]
