மீன் பிடிப்பதற்காக சென்ற மீனவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தாளாப்பள்ளி பகுதியில் முனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன்பிடித் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவி இருகின்றார். இந்நிலையில் முனியப்பன் தனது மனைவியிடம் கே.பி.ஆர். அணையில் மீன்பிடிக்க செல்வதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். ஆனால் முனியப்பன் மீண்டும் வீடு திரும்பாத காரணத்தால் அவரது மனைவி கோவிந்தம்மாள் பதற்றமடைந்துள்ளரர். இதுகுறித்து கோவிந்தம்மாள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். […]
