ரஷ்யாவுடன் ஜப்பான் புதிய மீன்பிடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறது. உக்ரைனுடனான போர் பதற்றம் தொடர்கின்ற நிலையில் ரஷ்யாவும் ஜப்பானும் புதிய மீன்பிடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன. இந்த தகவலை ஜப்பானின் மீன்பிடி நிறுவனம் கூறியுள்ளது. அதன்படி ரஷ்ய ஆறுகளில் பிறந்த சால்மன் (Salmon), ட்ரவுட் (Trout) வகை மீன்களைப் பிடிப்பதற்கு அந்த ஒப்பந்தம் வகைசெய்கிறது. டோக்கியோவும் மாஸ்கோவும் இந்த மாதத் தொடக்கத்தில் மீன்பிடித்தல் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தன. இதனை தொடர்ந்தே பேச்சுவார்த்தையானது ஒப்பந்தத்தில் முடிந்திருக்கிறது.2,050 டன் சால்மன், ட்ரவுட் […]
