மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவ வீரர்கள் நியமிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரையில் உலக பிரசித்தி பெற்ற கோவிலான மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அம்மனை தரிசிக்க வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். மேலும் பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர். இதனையடுத்து பொதுமக்கள் அதிக அளவில் வருவதால் நாள்தோறும் கோவில் பாதுகாப்பிற்காக 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் […]
