கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் படகில் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் உறவினர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் யூனியன் பனைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏராளமான மீனவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். சோகையன் தோப்பு, புதுக்குடியிருப்பு, கிருஷ்ணாபுரம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் தினம்தோறும் நாட்டுப் படகுகளில் கடலுக்கு சென்று விலை உயர்ந்த மீன், நண்டு, கணவாய் போன்ற மீன்களைப் பிடித்து வந்து மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த தங்கவேலு […]
