படகுகள் மோதி கொண்டதால் மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மரமடி பகுதியில் மீனவரான ராசையன்(61) என்பவர் ரசித்து வந்துள்ளார். இவருக்கு அருள் செல்வி(54) என்ற மனைவியும், 5 பிள்ளைகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் ராசையன் அதே பகுதியில் வசிக்கும் மிக்கேல் தாஸ், டென்னிஸ் ஆகிய 2 பேருடன் தனது சகோதரரான ஆல்பின்ஸ் என்பவருக்கு சொந்தமான படகில் குளச்சல் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கடல் சீற்றம் அதிகமாக […]
