மீனவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவளம் பகுதியில் மீனவரான சகாயம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், இரண்டு வயதில் ஒரு குழந்தையும் இருக்கின்றனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சகாயத்தின் முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு அவரால் வேலைக்கு செல்ல இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சகாயம் நேற்று மதியம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ […]
