மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் வருகின்ற 21ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக மீனவர் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மீனவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் மீனவர் என பலரும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இலங்கை சிறையில் அடைபட்டு கிடக்கும் ராமேஸ்வரம் மற்றும் நாகபட்டினம் மீனவர்கள் 56 பேரையும், 10 விசைபடகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, […]
