ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக மீனவர் கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள முள்ளிமுனை பகுதியில் பால்கண்ணன்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மீனவரான இவரை முன்விரோதம் காரணமாக சிலர் கொலை செய்துள்ளனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அதேபகுதியை சேர்ந்த ஜெயபால், கதிரவன் மற்றும் சின்னதொண்டி வடவயலை சேர்ந்த சிவகாமி என்ற பெண்ணையும் கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பால்பாண்டி(36), […]
