மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர் நிலைதடுமாறி கடலில் விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெரியசாமிபுரம் பகுதியில் மீனவரான பிரான்சிஸ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரான்சிஸ் அப்பகுதியில் வசிக்கும் சிலருடன் இணைந்து நாட்டுப் படகின் மூலம் மீன் பிடிப்பதற்கு கடலுக்குள் சென்றுள்ளார். அப்போது பிரான்சிஸ் சென்ற படகு நடுக்கடலில் நின்று அப்பகுதியிலுள்ள கணவாய்க்கு செல்வதற்கு தெர்மாக்கோலால் செய்யப்பட்ட சிறிய படகினை எடுத்துக்கொண்டு அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். […]
