கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் தூத்தூர் மற்றும் இணையம் மண்டலங்களிலுள்ள 18 மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் செய்து வருகின்றனர். இத்துறைமுகத்தின் முகத்துவார பகுதியில் அடிக்கடி படகு கவிழ்ந்து மீனவர்கள் இறந்துவரும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதில் துறைமுகத்தின் முகத்துவாரம் அமைக்கப்பட்ட கட்டமைப்பிலுள்ள கோளாறு காரணமாகத்தான் இந்த விபத்து நேரிடுவதாக மீனவர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் சென்ற 11ஆம் தேதி பூத்துறை பகுதியில் வசித்துவந்த சைமன் என்ற மீனவர் துறைமுக நுழைவாயில் […]
