தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடப் போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது மிகவும் கண்டனத்திற்குரியது என விஜயகாந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் வேதாரண்யம் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கையைச் சேர்ந்த கடல் கொள்ளையர்கள் கத்தி, அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதங்களால் தமிழக மீனவர்களை தாக்கி விட்டு அவர்களிடம் இருந்த வாக்கிடாக்கி, டீசல், […]
