தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மீனவர்களுக்கு மீன் வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதையடுத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் – புதுவை கடற்கரை நோக்கி நகர்ந்து வரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை நாட்டு படகு, விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
