கேரள மாநிலம் கொல்லத்தில் மீனவர் பூக்குஞ்சு வசித்து வருகிறார். இவர் வீடு கட்டுவதற்காக கருணாகபள்ளியிலுள்ள யூனியன் வங்கியில் ரூபாய்.9 லட்சம் வரை கடன் வாங்கியிருக்கிறார். எனினும் அவரால் குறிப்பிட்ட காலத்திற்குள் கடனை திருப்பிசெலுத்த முடியவில்லை. இதன் காரணமாக வட்டி மேல் வட்டி அதிகரித்தது. இதையடுத்து இறுதியில் வங்கியிலிருந்து சொத்துகளை முடக்கம் செய்வதற்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என அவரிடம் கூறப்பட்டது. இதற்கிடையில் அவருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதனால் அவரால் வீட்டை விற்க இயலவில்லை. இந்த நிலையில் அன்று […]
