உக்ரைனுக்கு எதிராக கருங்கடல் பிராந்தியத்தில் தாக்குதலை ரஷ்ய ராணுவ படைகள் தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நீண்ட நாட்களாக தொடர்ந்து நீடித்து வருகின்றது. இந்நிலையில் ரஷ்யா கருங்கடலில் போர்க்கப்பல்களை நிறுத்தி முற்றுகையிட்டுள்ளதால் உக்கிரனிலிருந்து தானியங்களை கடல்மார்க்கமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் ஐ.நா. மற்றும் துருக்கி அரசு மேற்கொண்டுள்ள முயற்சியின் பலனாக தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் ரஷ்யாவும், உக்ரைனும் கடந்த வாரம் கையெழுத்திட்டனர். மேலும் இந்த ஒப்பந்தத்தில் கருங்கடல் […]
