உத்திரபிரதேசத்தில் 180 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் எட்டுமணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார். உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே அமைந்துள்ள தாரியை என்ற கிராமத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஷிவா. நேற்று காலை விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது காலை ஏழு முப்பது மணி அளவில் 180 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அவருடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் பெற்றோர்களுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் […]
