மத்திய பிரதேசத்தில் கார்க்கோன் மாவட்டத்தில் சுற்றுலா சென்ற இடத்தில் கனமழையின் காரணமாக ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதில் அந்த பகுதியில் இருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்கள் வைரலாக பரவி வருகிறது. இந்தூர் மாவட்டத்தை சேர்ந்த 50 பேர் அங்குள்ள வனப்பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அப்போது அவர்கள் 14 கார்களில் பயணம் மேற்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் கார்கள் சிக்கிக் கொண்டது. இந்த சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது. […]
