படகு விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். உத்திரபிரதேசத்தில் உள்ள பதேபூர் மாவட்டத்தில் ஜராவ்லி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு கடந்த 11-ம் தேதி படகில் 40 பேர் சென்றுள்ளனர். இந்த படகு யமுனை ஆற்றில் சென்று கொண்டிருந்த போது திடீரென படகு உடைந்து விபத்து ஏற்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் கவிழ்ந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை 12 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புகள் […]
